நாகர்கோவில் மாநகராட்சி

அதிகாரப்பூர்வ இணையதளம்
நாகர்கோவில் மாநகராட்சி
நாகர்கோவில் போலியோ தடுப்பூசி நிகழ்ச்சி: மாநகராட்சி மேயர் துவக்கி வைத்தார்.+ நாகர்கோவில் மாநகராட்சியின் வடசேரி ஆம்னி பேருந்து நிலையத்தில் நடைபெறும் கட்டுமான பணிகளை நேரில் ஆய்வு செய்யப்படுகின்றன!+ நாகர்கோவிலில் சாலை பணிகளின் வெற்றியான முடிவு: ஆணையர் ஆனந்த் மோகன் ஆய்வு!+ நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட மேல பெருவிளை: அந்தோணியார் குறுக்கு தெருக்களில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி துவக்கம்!+ நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட லட்சுமிபுரம் தெற்கு தெருவில் ராஜீவ் காந்தி தெரும், கணேசபுரம் மெயின் ரோட்டில் தார் சாலை அமைக்கும் பணியை, மாநகராட்சி மேயர் ரெ. மகேஷ் அவர்கள் துவக்கி வைத்தார்கள்!+ நாகர்கோவில் மாநகராட்சி 4வது வார்டுக்கு உட்பட்ட பெருவிளை பகுதியில் புதிய கணினி வரி வசூல் மையம் திறப்பு!+ தினசரி தண்ணீர் தர மாதிரி அறிக்கை+ நாகர்கோவில் மாநகராட்சியின் ஆதரவற்றோர் தங்கும் விடுதி அபயகேந்திராவில், மாநகராட்சி ஆணையர் நேரில் ஆய்வு செய்தார்கள்!+ நாகர்கோவில் மாநகராட்சி மாமன்ற கூட்டம்: மாநகராட்சி துணை ஆணையர்கள் முன்னிலையில் நடைபெற்றது!+ மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் கீழசரக்கல்விளை கன்னங்குளம் பகுதிகளில் ஆய்வு பணிகளை மேற்கொண்டார்!+

நகரமைப்பு

நாகர்கோவில் மாநகராட்சி

நகரமைப்பு

நன்கு திட்டம்மிடப்பட்டு கட்டப்படும் சிறிய வீடு மிகவும் அழகாவும் நமக்கு நிறைய இடங்கள் பயன்படாமல் போவதை தடுக்கும், அதுபோல தான் ஒரு நகர் அமைப்பும். ஒரு நகரின் வளர்ச்சிக்கு அந்த நகரை திட்டமிட்டு அமைதல் மிக முக்கியம் ஆனது, அது மக்களுக்கு அதிக வசதிகளை வழங்குகிறது. நகரமைப்பு என்று ஒன்று இல்லாத பொழுது அந்த நகரம் ஆனது பல்வேறு மோசமான இடையூறுகளை சந்திக்கும் . குறிப்பாக

  • ஒழுங்கற்ற சாலை அமைப்புகள் , குறுகிய வீதிகள்
  • குடிருப்புகளின் வளர்ச்சி தடைபெறும்.
  • குடிநீர் , வடிகால் , மின்சாரம் போன்ற அத்தியாவசிய தேவைகள் முறையாக கிடைக்காது.
  • முறையற்ற சாலைக்களால் வேலை நேரத்தில் அதிக போக்குவரது நெருக்கடி ஏற்படும்.
  • கட்டுபாடற்ற நகரின் வளர்ச்சி , ஆரோக்கியமற்ற சுற்றுச்சுழல்.
  • தொழில் நிறுவனகளின் அமைவிடம்.
  • பூங்கா மற்றும் விளையாட்டு மைதானங்களுக்கு போதிய இடங்கள் இல்லாதது
  • மேற்கூறிய காரணங்களால் மக்களுக்கு ஆரோக்கியமற்ற நகர சூழல் அமைகிறது. இதனை கருத்தில் கொண்டு ஒரு நகர்திற்கான திட்டமிடல் நமக்கு நீண்டகாலதிற்கான தீர்வை தரும், நகரின் நீண்டகால வளர்ச்சியை தரும்.

புதிதாக கட்டப்படும் கட்டிட அனுமதி பெற தேவையான ஆவணங்கள்:

  • கட்டட அனுமதி கோரும் விண்ணப்பம்.
  • உத்தேச மனையின் புகைப்படம்.
  • திட்ட அனுமதி கோரும் விண்ணப்பம்.
  • கட்டடதொழிலாளர் நலவாரியம் படிவம்.
  • உறுதிமொழி படிவம்.
  • நிலுவை இல்லா சொத்து வரி/ காலிமனை ரசீது,குடிநீர்கட்டண ரசீது.
  • கரத்தீர்வை ரசீது.
  • சிட்டா அல்லது பட்டா.
  • புலப்பட நகல்
  • விண்ணப்பதாரரின் கிரயப்பத்திர பதிவுடன் கூடிய வில்லங்க சான்று.
  • மூலப்பத்திரம்
  • விண்ணப்பதாரரின் கிரயப்பத்திர நகல்
  • சொத்தின் பெயரில்அடமானம் இருந்தால் சமந்தப்பட்ட வங்கியின் தடையின்மைசான்று.
  • பாதாள சாக்கடை வைப்பு தொகை ரசீது.
  • SMART DCR வரைபடம்
  • கட்டட வரைபட நகல்

சேவை கோரிக்கை ரசீதைப் பெற / ஆன்லைனில் விண்ணப்பிக்க  

கட்டிட விண்ணப்பத்தை மதிப்பாய்வு செய்யும் போது நகர திட்டமிடல் அலுவலர் / சர்வேயர் கருத்தில் கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள்.

  • நகர திட்டமிடல் விதிகளின்படி நீர் மட்டத்திலிருந்து 15 மீட்டர்.
  • விதிகளின்படி முன் பக்கமா, பின் பக்கமா, காலி இடமா..
  • வாகன நிறுத்தம் விதிகளின்படி உள்ளதா?
  • கட்டிட அறைகள் விதிகளின்படி உள்ளதா?
  • குளியலறை மற்றும் கழிப்பறை அளவுகள் விதிகளின்படி உள்ளதா?
  • காற்றுப்பாதை இருக்கிறதா..
  • திறப்பு இருக்கிறதா.
  • விதிப்படி குளியலறை கழிப்பறை
  • காற்று புகுகிறதா.
  • புகைபோக்கி விதியின் படி.
  • மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு விதிகளின்படி உள்ளதா.
  • விதிப்படி சூரிய மின்சக்தி அமைப்பா.
  • விதிப்படி படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளதா.
  • கதவுகள் வழிகள் வழக்கமானதா?
  • சுடுகாடு 30 மீட்டர் சுற்றளவில் உள்ளதா
  • சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பமானது மாநகராட்சிச் சட்டம், நகர திட்டமிடல் சட்டம், தொடக்கக் கல்விச் சட்டம், தொழில்துறைச் சட்டம், நிலம் கையகப்படுத்தும் சட்டம், வீட்டுவசதிச் சட்டம் அல்லது அவற்றின் துணைச் சட்டங்களின் வரம்புக்கு அப்பாற்பட்டதாக இருந்தாலும் சரி.
  • இதுமட்டுமின்றி வேறு சில நகரமைப்பு விதிகளின்படி கட்டிட அனுமதி விண்ணப்பத்தில் நகரமைப்பு அலுவலர் மற்றும் மாநகராட்சி கமிஷனர் ஒப்புதல் அளிப்பார்கள். ஒரு நகரம் மற்றும் நகர மக்களின் வாழ்வாதாரம் மற்றும் வாழ்க்கைத் தரம் ஆகியவை நிலையான வளர்ச்சிப் பாதையை நோக்கிச் செல்ல உதவும்.

Downloads

1 நகர திட்டமிடல் ஒப்புதல் Download
2 பதிவு செய்யப்பட்ட பொறியாளர்கள் Download
3 TN கட்டிடங்கள் சட்டம் Download
4 தமிழ்நாடு வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகளை இணைத்தது Download