கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் திரு அரவிந்த் இ.ஆ.ப அவர்கள் இன்று முக்கடல் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்கள். ஆய்வின்போது முக்கடல் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளை பார்வையிட்டார்கள். அதுபோல அங்கு கல்வி சுற்றுலா வரும் மாணவ மாணவிகளை வசதிக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள அறிவியல் பூங்காவையும், அங்கு நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக புதிதாக கட்டப்பட்டுள்ள சமுதாய நல கூட்டத்தையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். மேற்படி ஆய்வின் போது மாநகராட்சி ஆணையர் திருமதி.ஆஷா அஜித் இ.ஆ.ப அவர்கள் உடன் இருந்தார்கள். இதனைத்தொடர்ந்து புளி அடியில் அமைந்து மின் தகன எரிவாயு கூடத்தையும் , கிருஷ்ணன்கோவில் பகுதியில் அமைந்துள்ள சுத்திகரிப்பு நிலையத்தையும் பார்வையிட்டார்கள். அங்கு புத்தன் அணை கூட்டு குடிநீர் திட்டத்திற்காக நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்கள். இதனைத் தொடர்ந்து வடசேரி பகுதியில் அமைந்துள்ள நுண்உர செயலாக்க மையத்திற்கு சென்றார்கள்,அங்கு குப்பைகள் தரம் பிரித்து உரமாக படுவதை ஆய்வு செய்தார்கள். அங்கிருந்து மாநகராட்சி அலுவலகத்திற்கான புதிய கட்டிட கட்டுமானப் பணிகளைப் பார்வையிட்டார்கள். இப்படி ஆய்வு பணிகளின் போது மாநகராட்சி ஆணையர் திருமதி ஆஷா அஜித் இ.ஆ.ப அவர்கள் உடன் இருந்தார்கள்.