Nagercoil Corporation

Official Website
Nagercoil Corporation

சாலை விரிவாக்க பணிகள் ஆணையர் ஆய்வு

நாகர்கோவில் சவேரியார் கோவில் சந்திப்பிலிருந்து செட்டிகுளம் மற்றும் அண்ணா விளையாட்டு அரங்கம் முதல் மணிமேடை வரை நடைபெற்று வரும் சாலை விரிவாக்கப் பணிகளை ஆணையர் திருமதி. ஆஷா அஜித் IAS அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். மேலும் அப்பகுதியில் அளவீடு செய்யாத இடங்களை அளவீடு செய்து பணிகளை எவ்வித தொய்வுமின்றி விரைந்து முடிக்கவும் ஆணையர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். ஆய்வின்போது நகரமைப்பு அலுவலர் திருமதி. விமலா அவர்கள் மற்றும் நகரமைப்பு ஆய்வாளர்கள் உடன் இருந்தனர்.