Nagercoil Corporation

Official Website
Nagercoil Corporation

நமக்கு நாமே திட்டம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது

தமிழக அரசின் நமக்கு நாமே திட்டத்தின் படி நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய அடிப்படை கட்டமைப்பு வசதிகள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் மாநகராட்சி ஆணையர் அவர்களின் தலைமையில் மாநகராட்சி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.இக்கூட்டத்தில் குடியிருப்போர் சங்க பிரதிநிதிகள், வர்த்தக நிறுவன சங்கங்கள்,தன்னார்வ அமைப்புகள் கடை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.மேற்படி கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் அவர்கள் நமக்கு நாமே திட்டத்தின் படி நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் உள்ள நீர்நிலைகளை புனரமைத்தல், புதிய பூங்காக்கள் அமைத்தல், பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு வசதி ஏற்படுத்துதல், மரம் நடுதல், தெருவிளக்கு அமைத்தல், கண்காணிப்பு கருவி அமைத்தல், பள்ளிக்கூட மேம்பாடு, சாலை வசதிகள், அங்கன்வாடி கட்டிடம் புனரமைப்பு போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வண்ணம் அனைவரும் மாநகராட்சி இணைய நிர்வாகத்துடன் இணைந்து நமக்கு நாமே செயல்படுத்த முன்வருமாறு தெரிவித்தார்கள்.
மேலும் விபரங்களுக்கு
Mail: commr.nagercoil@gmail.com
Whatsapp:9487038984