அரசின் உத்தரவின்படி கொரோன நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கையாக இன்றைய தினம் தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. அதன்படி #நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட 52 வார்டுகளிலும் மொத்தம் 105 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகிறது. இதனை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.அரவிந்த் இ.ஆ.ப அவர்கள் அவர்கள் மற்றும் மாநகராட்சி ஆணையர் திருமதி.ஆஷா அஜித் இ.ஆ.ப. அவர்கள் துவக்கி வைத்தார்கள். இதனைத் தொடர்ந்து நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் தடுப்பூசி முகாம்களை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். மேற்படி முகாமினை சிறப்பாக நடத்திடும் வகையில் மாநகர்நல அலுவலர், நகரமைப்பு அலுவலர் ஆகியோர் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள், வருவாய் ஆய்வாளர்கள், நகரமைப்பு ஆய்வாளர்கள், பணி மேற்பார்வையாளர்கள், பணி ஆய்வாளர்கள், வருவாய் உதவியாளர்கள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டு அனைத்து முகாம்களும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாதவர்கள் தங்கள் வீடுகளில் அருகில் உள்ள முகாம்களுக்கு சென்று தடுப்பூசியினை செலுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். தனிமனித பாதுகாப்பே தேசத்தின் பாதுகாப்பு.