நாகர்கோவில் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் படி அனைத்து வீடுகளிலும் குப்பைகள் தரம் பிரித்து வாங்கப்பட்டு மக்கும் குப்பைகள் அனைத்தும் இயற்கை உரமாக மாற்றி விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. தற்பொழுது திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் படி ஒவ்வொரு வீடுகளிலும் PIPE COMPOSTING முறையில் பொது மக்கள் தங்கள் வீடுகளிலேயே மக்கும் குப்பைகளை கொண்டு இயற்கை உரத்தினை தயாரிக்கும் முறை ஏற்படுத்தப்பட்டுள்ளன.இதனை இன்றைய தினம் நாகர்கோவில் ஹோலி கிராஸ் நகர் பகுதியில் உள்ள வீடுகளில் பைப் கம்போஸ்டிங் முறையினை மாண்புமிகு தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் திரு மனோ தங்கராஜ் அவர்கள் துவக்கி வைத்தார்கள். நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு அரவிந்த் IAS மாநகராட்சி ஆணையர் திருமதி ஆஷா அஜித் IAS ஆகியோர் கலந்து கொண்டனர் இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் மரக்கன்றுகளும் நடப்பட்டன.மேலும் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் PIPE COMPOSTING செயல்படுத்த அல்லது இதுகுறித்த விபரத்தினை தெரிந்துகொள்ள
தொடர்புக்கு : 04652 231516
WhatsApp: 9487038984