நாகர்கோவில் மாநகராட்சி ராஜீவ் நகர் பகுதியில் பராமரிப்பின்றி இருந்த பகுதியில் பூங்கா அமைத்து தர வலியுறுத்தி அங்குள்ள குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்ததை அடுத்து இன்றைய தினம் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் திருமதி.ஆஷா அஜித் இ.ஆ.ப அப்பகுதியில் மரக்கன்றுகள் நடும் பணியை துவக்கி வைத்தார்கள் இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் 20க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. நடப்பட்ட மரக்கன்றுகளை வரும் நாட்களில் ராஜீவ் நகர் குடியிருப்போர் சங்கத்தின் மூலம் பராமரிக்கப்படவுள்ளது. நிகழ்வில் மாநகராட்சி நகரமைப்பு அலுவலர் நகரமைப்பு ஆய்வாளர் சுகாதார ஆய்வாளர் வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் குடியிருப்போர் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். வரும் நாட்களில் மாநகராட்சி பகுதிகளில் உள்ள பராமரிப்பின்றி இருக்கும் பூங்காக்களில் மரக்கன்றுகள் நடும் பணிகளும் ஏதுவான இடங்களில் குறுங்காடுகள் அமைக்கும் பணிகள் துவங்கப்படும் என மாநகராட்சி ஆணையர் அவர்கள் தெரிவித்தார்கள். மேலும் மாநகராட்சி பகுதிகளில் மரம் நடும் ஆர்வம் உள்ள தன்னார்வலர்கள் தன்னார்வ அமைப்புகள் மாநகராட்சி நிர்வாகத்தை தொடர்பு கொள்ளவும்.
*WhatsApp:9487038984*
வாருங்கள் நாம் அனைவரும் இணைந்து கைகோர்த்து பசுமையான மாநகரை உருவாக்குவோம்.