Nagercoil Corporation

Official Website
Nagercoil Corporation

Nagercoil Filter House

நாகர்கோவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்

நாகர்கோவில் மாநகராட்சி மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக இருப்பது முக்கடல் அணை யாகும். இந்த அணையானது இந்திய சுதந்திரத்திற்கு முன்னர் 1945 ம்ஆண்டுதிருவாங்கூர்மன்னர்சித்திரைதிருநாள்பாலராமவர்மா அவர்களின் உத்தரவின் படி வம்பாறு ஆற்றின் குறுக்கே  கட்டப்பட்டதாகும் இது சம்பந்தமான விவரங்கள் இந்த இணைப்பில் உள்ளது.

இணைப்பு : https://thambivinoth.blogspot.com/2020/09/blog-post.html

#முக்கடல் அணையில் இருந்து கிடைக்கப்பெறும் தண்ணீரானது நாகர்கோவில் கிருஷ்ணன் கோவில் பகுதியில் அமையப்பெற்றுள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு சுத்திகரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

குடிநீர்சுத்திகரிப்புநிலையம்

கிருஷ்ணன் கோவில் பகுதியில் அமையபெற்ற குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆனது ,முக்கடல் அணை யில் இருந்து பெறப்படும் நீரை நாகர்கோவில் நகர மக்களுக்கு சுத்திகரித்து வழ்ங்கும்வண்ணம் ஜூன் 20 1945 திருவாங்கூர் மன்னர்அவர்களால் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

கிருஷ்ணன் கோவில் சுத்திகரிப்பு நிலையத்தில் தினம்தோறும் 200 லட்சம் லிட்டர் தண்ணீர்  சுத்திகரிக்கப்பட்டு நாகர்கோவில் மாநகர மக்களுக்கு வழ்ங்கப்பட்டு வருகிறது. தற்பொழுது , தினம்தோறும் 7-8 வார்டு பகுதிகள் என்ற அளவில் ஒவ்வொரு பகுதிக்கும் குடிநீர் விநியோகம் நடைபெறுகிறது.

1945ஆம் ஆண்டு இது கட்டப்பட்ட பொழுது அன்றைய நாகர்கோவில் நகராட்சி மக்கள்தொகை கணக்கின்படி அவர்களின் தேவைக்கேற்ப , தினசரி (7MILLIONLITRE) 70லட்சம் லிட்டர் தண்ணீர் சுத்திகரிக்கும் அளவில் கட்டப்பட்டது. இதனை தொடர்ந்து 1961 ஆம் ஆண்டு நாகர்கோவில் நகராட்சியில் இணைக்கப்பட பகுதிகளுக்கும் இங்கு இருந்து குடிநீர் விநியோகம் ஆரம்பிக்கட்டது.

இரண்டாவதுநிலையம்

1961 ஆம் ஆண்டு நாகர்கோவில் நகராட்சியில் இணைக்கப்பட பகுதிகளுக்கும் இங்கு இருந்து குடிநீர் விநியோகம் ஆரம்பிக்கட்டதை தொடர்ந்து தினம்தோறும் மக்களுக்கு தேவைப்படும் நீரின் அளவு அதிகரிக்க தொடங்கியது , இதை கருந்தில்கொண்டு 1979 ஆம் ஜூலை 7 தியதி நாகர்கோவிலில் நடைபெற்ற விழாவில் அன்றைய தமிழக முதல்வர் திரு.எம்.ஜி.ஆர் அவர்களால் நாகர்கோவில் நகராட்சி குடிநீர் மேம்பாட்டு விநியோகம் திட்டதின்படி சுத்திகரிப்பு நிலைய இரண்டாவது STATION திறக்கப்பட்டது.

இரண்டாவது நிலையதின் மூலமாக தினமும் (8.5MILLIONLITRE) 85 லட்சம் லிட்டர் தண்ணீர் சுத்திகரித்து வழ்ஙகப்படுகிறது.

இதன்பின்னர் 2001 ஆம் ஆண்டு அன்றைய தமிழக அரசு (17MILLIONLITRE) 170 லட்சம் லிட்டர் அளவில் மூன்றாவது சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டது. மேற்கூறிய மூன்று சுத்திகரிப்பு நிலையம் மூலமாக தினம்தோறும் 200 லட்சம் லிட்டர் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு நாகர்கோவில் மாநகர மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

புத்தன் அணை கூட்டு குடிநீர் திட்டம்

நாகர்கோவில் மாநகரில் தற்பொழுது  புத்தன் அணை கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்ப்படுகிறது.இதில் இருந்து கிடைக்கும் நீரையும் கிருஷ்ணன்கோவில் சுத்திகரிப்பு நிலையதிற்க்கு கொண்டுவர்ப்பட்டு விநியோக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது .அதன் படி அங்கு தற்பொழுது அங்கு 41.12 MILLIONLITRE 410 லட்சம் லிட்டர் தண்ணீர் சுத்திகரிக்கப்படும்.

 கிருஷ்ணன் கோவில் சுத்திகரிப்பு நிலையதின் செயல்பாடுகளை பார்க்கும் வண்ணம் பள்ளி, கல்லூரி மாணவ , மாணவிகள் (INDUSTRIAL VISIT) அனுமதிக்கபடுகிறார்கள். உரிய முன் அனுமதி பெற்று  பள்ளி, கல்லூரி மாணவ,மாணவிகளுக்கு மாநகராட்சி அலுவர்கள் நிலையதின் செயல்பாடுகளை விளக்கி கூறுவர். மேலும் இங்கு பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.

சுத்திகரிக்கும் முறை :

கிருஷ்ணன் கோவில் சுத்திகரிப்பு நிலையதிர்க்கு முக்கடல் அணை மற்றும் கோடை காலங்களில் பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் பெறப்பட்டு வருகிறது, இந்த நீரை கீழ் காணும் வழிமுறைகளில் சுத்திகரிக்கப்படுகிறது.

1.     Aeration

2.     Plaint sedimentation 

3.     Coagulation  with sedimentation

4.     Filteration by rapad sand method

5.     Disinfection 

AERATION

இந்த முறையில் தூய காற்று நீருள் உட்புகும் வகையில் ஓடவிடப்படும் , இதன்மூலம் நீரில் உள்ள அதிக்கப்படியான இரும்புசத்து (IRON) , CO2 குறைக்கப்பட்டு நீரில் உள்ள ஆக்ஸிஜன் அளவும் 5-10mg அளவு உறுதிப்படுதப்படும்.இதனால் நீரில் உள்ள துர்நாற்றம் போக்கப்படும்.

PLAINT SEDIMENTATION

இந்த முறையில் aeration செய்யப்பட்ட நீர்ஆனது தொடர்ந்து குறைந்தபட்சம் 4 மணி நேரம் ஒரு இடத்தில் வைக்கப்படும், இதில் நீரில் உள்ள அழுக்குகள் கீழ் இறங்கும், இதனால் நீரில் உள்ள கலங்கள் தன்மை மாறும்

COAGULATION WITH SEDIMENTATION

இதில் ALUM CHEMICAL நீரில் கலக்கப்பட்டு 4 மணி நேரம் ஓர் இடத்தில் வைக்கப்படும் இதன்மூலம் குடிநீரானது 70% சுத்தம் செய்யப்படும் , இதனை தொடர்ந்து FILTERATION BY RAPID SAND METHOD  மூலம் மேலும் சுத்தம் செய்யப்பட்டு 80% சுத்தமாகும்.

DISINFECTION

இதில் SODIUM HYPO CHLORIDE மூலம் முழுமையாக சுத்தம் செய்யப்பட்டு ,மக்களுக்கு விநியோகம் செய்யும் வகையில் சிறந்த குடிநீராக வருகிறது.இந்த நீரை தேக்கிவைக்கும் வண்ணம் நாகர்கோவில் மாநகர் முழுவதும் 12 இடங்களில் மேல்நிலைநீர்தேக்க தொட்டி கட்டப்பட்டு ,அங்கு இருந்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.