நாகர்கோவில் மாநகராட்சியில் மற்றுமொறு முக்கிய பிரிவு
பொறியியல் பிரிவு
✓ நாகர்கோவில் மாநகரில் மேற்கொள்ளப்படும்
✓சாலை பணிகள்
✓தெருவிளக்கு பராமரிப்புகள்
✓குடிநீர் விநியோகம்
போன்ற முக்கிய பணிகள் பொறியியல் பிரிவின் கீழ் நடைபெறுகின்றன.
பொறியியல் பிரிவில் மாநகராட்சி பொறியாளர்
உதவி பொறியாளர்
இளநிலை பொறியாளர்
திறன் பணியாளர்கள் மூலம் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன
நாகர்கோவில் மாநகராட்சி மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக இருப்பது முக்கடல் அணை யாகும்.
முக்கடல் அணையில் இருந்து கிடைக்கப்பெறும் தண்ணீரானது #நாகர்கோவில் கிருஷ்ணன் கோவில் பகுதியில் அமையப்பெற்றுள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு சுத்திகரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
கிருஷ்ணன் கோவில் பகுதியில் அமையபெற்ற குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆனது , முக்கடல் அணை யில் இருந்து பெறப்படும் நீரை நாகர்கோவில் நகர மக்களுக்கு சுத்திகரித்து வழ்ஙகும்வண்ணம் ஜூன் 20 1945 திருவாங்கூர் மன்னர் அவர்களால் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.
கிருஷ்ணன்கோவில் சுத்திகரிப்பு நிலையத்தில் தினம்தோறும் 200 லட்சம் லிட்டர் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு நாகர்கோவில் மாநகர மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
தற்பொழுது , தினம்தோறும் 6 – 8 வார்டுகள், என்ற அளவில் ஒவ்வொரு பகுதிக்கும் குடிநீர் விநியோகம் நடைபெறுகிறது.
1945ஆம் ஆண்டு இது கட்டப்பட்ட பொழுது அன்றைய நாகர்கோவில் நகராட்சி மக்கள்தொகை கணக்கின்படி அவர்களின் தேவைக்கேற்ப , தினசரி (7MILLIONLITRE) 70லட்சம் லிட்டர் தண்ணீர் சுத்திகரிக்கும் அளவில் கட்டப்பட்டடு குடிநீர் விநியோகம் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து 1961 ஆம் ஆண்டு நாகர்கோவில் நகராட்சியில் இணைக்கப்பட பகுதிகளுக்கும் இங்கு இருந்து குடிநீர் விநியோகம் செய்ய ஆரம்பிக்கட்டது.
இதனால் தினம்தோறும் மக்களுக்கு தேவைப்படும் நீரின் அளவு தொடங்கியது , இதை கருந்தில்கொண்டு 1979 ஆம் ஜூலை 7 தியதி நாகர்கோவிலில் நடைபெற்ற விழாவில் அன்றைய தமிழக முதல்வர் திரு.எம்.ஜி.ஆர் அவர்களால் நாகர்கோவில் நகராட்சி குடிநீர் மேம்பாட்டு விநியோகம் திட்டதின்படி சுத்திகரிப்பு நிலைய இரண்டாவது STATION திறக்கப்பட்டது.
இரண்டாவது நிலையதின் மூலமாக தினமும் (8.5MILLIONLITRE) 85 லட்சம் லிட்டர் தண்ணீர் சுத்திகரித்து வழ்ஙகப்படுகிறது.
இதன்பின்னர் 2001 ஆம் ஆண்டு அன்றைய #தமிழக அரசு (17MILLIONLITRE) 170 லட்சம் லிட்டர் அளவில் மூன்றாவது சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டது.
மேற்கூறிய மூன்று சுத்திகரிப்பு நிலையம் மூலமாக தினம்தோறும் 200 லட்சம் லிட்டர் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு நாகர்கோவில் மாநகர மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
தற்பொழுது நாகர்கோவில் மாநகரில் குடிநீர் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் புத்தன் அணை கூட்டு குடிநீர் திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன
இதில் கிடைக்கும் நீரையும் கிருஷ்ணன்கோவில் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன் படி அங்கு தற்பொழுது 410 லட்சம் (41.12 மில்லியன் லிட்டர்) லிட்டர் தண்ணீரை சுத்திகரிக்கும் வகையில் நான்காவது சுத்திகரிப்பு நிலை கட்டப்பட்டு வருகிறது.
கிருஷ்ணன்கோவில் சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகளை பார்க்கும் வண்ணம் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகின்றது.
Industrial visit செய்வதற்கு உரிய அனுமதி பெற்று வரும் மாணவ-மாணவிகளுக்கு மாநகராட்சி அலுவலர்கள் நிலையத்தின் செயல்பாடுகளை விளக்கி கூறுகின்றனர்.
பொதுமக்கள் பார்வையிட அனுமதி இல்லை.
நாகர்கோயில் நகர முனிசிபல் கார்ப்பரேஷன்
52 வார்டுகளில் மொத்த தெருவிளக்குகள்
தெரு விளக்கு வகை | எண்ணிக்கை |
---|---|
40W/Tube | 11064 |
30W/LED | 4340 |
70W/LED | 248 |
120W/LED | 404 |
250W/SV | 1133 |
HIGH MAST | 78 nos |
400W/Hallogen | 396 |
150W/LED | 32 |
200W/LED | 5 |
மொத்தம்: 17,700 nos
தெரு விளக்கு பராமரிப்பு
நாகராஜன்
போர்வெல் பராமரிப்பு
லீடன்ஸ் டோன்