நாகர்கோவில் மாநகராட்சி

அதிகாரப்பூர்வ இணையதளம்
நாகர்கோவில் மாநகராட்சி
நாகர்கோவில் போலியோ தடுப்பூசி நிகழ்ச்சி: மாநகராட்சி மேயர் துவக்கி வைத்தார்.+ நாகர்கோவில் மாநகராட்சியின் வடசேரி ஆம்னி பேருந்து நிலையத்தில் நடைபெறும் கட்டுமான பணிகளை நேரில் ஆய்வு செய்யப்படுகின்றன!+ நாகர்கோவிலில் சாலை பணிகளின் வெற்றியான முடிவு: ஆணையர் ஆனந்த் மோகன் ஆய்வு!+ நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட மேல பெருவிளை: அந்தோணியார் குறுக்கு தெருக்களில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி துவக்கம்!+ நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட லட்சுமிபுரம் தெற்கு தெருவில் ராஜீவ் காந்தி தெரும், கணேசபுரம் மெயின் ரோட்டில் தார் சாலை அமைக்கும் பணியை, மாநகராட்சி மேயர் ரெ. மகேஷ் அவர்கள் துவக்கி வைத்தார்கள்!+ நாகர்கோவில் மாநகராட்சி 4வது வார்டுக்கு உட்பட்ட பெருவிளை பகுதியில் புதிய கணினி வரி வசூல் மையம் திறப்பு!+ தினசரி தண்ணீர் தர மாதிரி அறிக்கை+ நாகர்கோவில் மாநகராட்சியின் ஆதரவற்றோர் தங்கும் விடுதி அபயகேந்திராவில், மாநகராட்சி ஆணையர் நேரில் ஆய்வு செய்தார்கள்!+ நாகர்கோவில் மாநகராட்சி மாமன்ற கூட்டம்: மாநகராட்சி துணை ஆணையர்கள் முன்னிலையில் நடைபெற்றது!+ மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் கீழசரக்கல்விளை கன்னங்குளம் பகுதிகளில் ஆய்வு பணிகளை மேற்கொண்டார்!+

கிருஷ்ணன்கோவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்

  • முக்கடல் அணையில் இருந்து கிடைக்கப்பெறும் தண்ணீரானது நாகர்கோவில் கிருஷ்ணன் கோவில் பகுதியில் அமையப்பெற்றுள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு சுத்திகரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. 
  • கிருஷ்ணன் கோவில் பகுதியில் அமையபெற்ற குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆனது ,ஜூன் 20 1945 திருவாங்கூர் மன்னர்அவர்களால் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. 
  • கிருஷ்ணன் கோவில் சுத்திகரிப்பு நிலையத்தில் தினம்தோறும் 200 லட்சம் லிட்டர் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு நாகர்கோவில் மாநகர மக்களுக்கு வழ்ங்கப்பட்டு வருகிறது. தற்பொழுது , தினம்தோறும் 7-8 வார்டு பகுதிகள் என்ற அளவில் ஒவ்வொரு பகுதிக்கும் குடிநீர் விநியோகம் நடைபெறுகிறது.
  • 1945ஆம் ஆண்டு இது கட்டப்பட்ட பொழுது அன்றைய நாகர்கோவில் நகராட்சி மக்கள்தொகை கணக்கின்படி அவர்களின் தேவைக்கேற்ப , தினசரி (7MILLIONLITRE) 70லட்சம் லிட்டர் தண்ணீர் சுத்திகரிக்கும் அளவில் கட்டப்பட்டது.
  • 1979 ஆம் ஜூலை 7 தியதி நாகர்கோவிலில் நடைபெற்ற விழாவில் அன்றைய தமிழக முதல்வர் திரு.எம்.ஜி.ஆர் அவர்களால் நாகர்கோவில் நகராட்சி குடிநீர் மேம்பாட்டு விநியோகம் திட்டதின்படி சுத்திகரிப்பு நிலைய இரண்டாவது STATION திறக்கப்பட்டது. 
  • இரண்டாவது நிலையதின் மூலமாக தினமும் (8.5MILLIONLITRE) 85 லட்சம் லிட்டர் தண்ணீர் சுத்திகரித்து வழ்ஙகப்படுகிறது.
  • 2001 ஆம் ஆண்டு (17MILLIONLITRE) 170 லட்சம் லிட்டர் அளவில் மூன்றாவது சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டது. 
  • மேற்கூறிய மூன்று சுத்திகரிப்பு நிலையம் மூலமாக தினம்தோறும் 200 லட்சம் லிட்டர் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு நாகர்கோவில் மாநகர மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
  • கிருஷ்ணன் கோவில் சுத்திகரிப்பு நிலையதின் செயல்பாடுகளை பார்க்கும் வண்ணம் பள்ளி, கல்லூரி மாணவ , மாணவிகள் (INDUSTRIAL VISIT) அனுமதிக்கபடுகிறார்கள். உரிய முன் அனுமதி பெற்று  பள்ளி, கல்லூரி மாணவ,மாணவிகளுக்கு மாநகராட்சி அலுவர்கள் நிலையதின் செயல்பாடுகளை விளக்கி கூறுவர். மேலும் இங்கு பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. 
  • கிருஷ்ணன் கோவில் சுத்திகரிப்பு நிலையத்திற்கு முக்கடல் அணை மற்றும் கோடை காலங்களில் பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் பெறப்பட்டு வருகிறது, கீழ் காணும் வழிமுறைகளில் சுத்திகரிக்கப்படுகிறது. 
  1. காற்றோட்டம்
  2. வெற்று வண்டல்
  3. வண்டலுடன் உறைதல்
  4. விரைவான மணல் முறை மூலம் வடிகட்டுதல்
  5. கிருமி நீக்கம்